13உலக சந்தையில் தங்கத்தின் விலையிறக்கம் காரணமாகவும், ரூபாயின் மதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாகவும் இந்தியாவில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக விலை குறைந்து வருகிறது. ஒன்பது மாதங்களுக்கு பிறகு தங்கத்தின்  விலை ஒரு பவுன் ரூ. 21ஆயிரத்துக்கு கீழே இறங்கி நேற்றைய விலை ரூ.20,872 ஆக சென்னையில் விற்பனையானது.

தங்கத்தை போலவே வெள்ளியின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. சென்னையில் நேற்று வெள்ளி ஒரு கிராம் ரூ.43.50ஆக விற்பனை ஆனது. ஒரு கிலோ ரூ.40,630 என விற்பனை செய்யப்பட்டது.

கமாடிட்டி சந்தையிலும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைந்தே காணப்பட்டது. இதனால் தங்கம் வாங்குபவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். மத்தியில் நிலையான அரசு ஏற்பட்டதன் காரணமாக ரூபாயின் மதிப்பு இன்னும் வலுவடையும் என்றும் அதன் காரணமாக தங்கத்தின் விலை இன்னும் சில நாட்களில் ரூ.20ஆயிரத்துக்கும் கீழே வரும் என்றும் நகைக்கடைக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *