சென்னை பெண்களின் உடை கட்டுப்பாடும், கோவிலுக்கு வழக்கமாக செல்லும் பழக்கத்தினாலும்தான் சென்னை நகரில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மிகவும் குறைவாக நடப்பதாக மத்திய பிரதேச மாநில உள்துறை அமைச்சர் பாபுலார் கவுர் நேற்று போபால் நகரில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசியுள்ளார்.

சமீபத்தில் சென்னை சுற்றுப்பயணத்திற்கு தான் சென்றதாகவும் அப்போது அங்குள்ள போலீஸ் உயரதிகாரிகளிடம் கலந்துரையாடியபோது அவர்கள் இந்த கருத்தை தெரிவித்ததாகவும் அவர் கூறினார். சென்னை நகரில் பெண்கள் தங்கள் உடலை மறைத்து ஆடைகள் அணிவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். மேலும் கோவில்களுக்கு சென்று பக்தியில் சிறந்தவர்களாக இருப்பதால் அங்கு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கடந்த 2012ஆம் ஆண்டில் வெறும் 19.32 சதவீதமே இருந்துள்ளது.

ஆனால் நவநாகரீக உடையணிந்து வெளியே வரும் பெண்கள் வாழும் மத்திய பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கடந்த 2012ஆம் ஆண்டில் 71.38 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே மத்திய பிரதேச பெண்கள், சென்னை பெண்களின் வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும் என அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply