shadow

நடிகர் ராம்கிக்கு நோட்டீஸ் அனுப்பிய சென்னை மாநகராட்சி

சின்ன பூவே மெல்ல பேசு’ என்ற படம் மூலம் கோலிவுட்டில் நடிகராக அறிமுகமான நடிகர் ராம்கி. அந்த படத்தை அடுத்து ‘செந்தூரப்பூவே’ ‘பறவைகள் பலவிதம்’, ‘இது எங்கள் நீதி’, ‘இணைந்த கைகள்’ என தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். ராதிகாவின் தங்கை நடிகை நிரோஷாவை திருமணம் செய்து ஒருசில ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் ராம்கி, ‘இங்கிலீஷ் படம்’ மூலம் ரீஎன்ட்ரீ கொடுத்தார். இப்படம் சமீபத்தில் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நடிகர் ராம்கிக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த 13 ஆண்டுகளாக ரூ.1.17 லட்சம் சொத்து வரி செலுத்தாத காரணத்தால் ராம்கி வீட்டிற்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *