banner removieசென்னையின் முக்கிய இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகள், டிஜிட்டல் பேனர்களை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.

சென்னை, ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகள் மற்றும் சென்னை மாவட்டத்திற்குட்பட்ட மாநகராட்சி பகுதிகளில் விளம்பர பலகைகள் மற்றும் பேனர்கள் அமைப்பதற்கு முறைப்படி விண்ணப்பிப்பவர்களுக்கு சென்னை மாவட்ட நிர்வாகமானது, உரிய விதிமுறைகள் மற்றும் சென்னை உயர்நீதி மன்றம் வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி விளம்பரப் பலகைகள் மற்றும் பேனர்களை அமைப்பதற்கு அனுமதி வழங்கி வருகிறது.

அவ்வாறு அனுமதி பெறாமல் வைக்கப்படும் விளம்பரப் பலகைகள் மற்றும் பேனர்களை கண்காணித்து, அவற்றை உடனுக்குடன் அகற்றிடவும் உரிய நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில், சென்னை, மயிலாப்பூர் வட்டத்திற்குட்பட்ட இராஜா அண்ணாமலைபுரம், ஆந்திர மகிள சபா மருத்துவமனை அருகே அமைக்கப்பட்டிருந்த அனுமதி பெறாத விளம்பர பலகைகள் மற்றும் பேனர்களை மயிலாப்பூர் வட்டாட்சியர் தலைமையிலான வருவாய்த்துறை குழுவினர், சென்னை மாநகர காவல்துறை மற்றும் சென்னை மாநகராட்சி ஆகியோர் ஒருங்கிணைந்து அகற்றினர்.

இந்த தகவலை சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *