11டாக்குமென்டரி படங்கள், ஆல்பங்கள், திரை இசை என்று இசையில் ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருக்கிறார், கல்லூரி மாணவியான ஸ்டெர்லின் நித்யா. முத்தாய்ப்பாக, இவர் பணியாற்றிய திரைப்படம், ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது! நித்யா… சென்னை, லயோலா கல்லூரியின் விஷ§வல் கம்யூனி கேஷன் இறுதியாண்டு மாணவி!
”அப்பா மார்டின் ஸ்டான்லி, ஆன்மிகப் பாடல்கள், வெஸ்டர்ன் ஆல்பம், ஸ்டேஜ் பெர் ஃபார்மன்ஸ் இசையில் திளைத்தவர். அவரைப் பார்த்துதான் நானும் இசை வசமானேன். சின்ன வயசுல இருந்தே கர்னாடிக், வெஸ்டர்ன், கிடார், கீ-போர்ட், வயலின்னு கத்துக்கிட்டேன். 2008-ல பல தேர்வுகளுக்குப் பிறகு, தமிழ் நாட்டுல இருந்து ஒரே பொண்ணா… ‘கே.எம் மியூசிக் கன்சர்வேட்டரி’யில இசை கத்துக்கற வாய்ப்பு எனக்குக் கிடைச்சுது. ‘இசைப் புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் சார் பார்வையில இசை கத் துக்கப் போறோம்ங்கிறதே பரவசமா இருந் துச்சு. ஒரு வருஷம் ‘டிப்ளோமா இன் மியூசிக் அண்ட் மியூசிக் டெக்னாலஜி’யில கத்துக்கிட்ட அனுபவங்கள் கடலளவு!
படிப்பை முடிச்சதோட… 20 டாக்குமென்டரி படங்கள், 52 ஷார்ட் ஃபிலிம்களுக்கு இசை அமைச்சேன். ‘எஸ்கிமோ’ங்கற என்னோட ஆல்பத்தை கேட்டுட்டு, ‘தேனிசைத் தென்றல்’ தேவா சார், பார்த்திபன், பாடகர் அபேன் இப்படி நிறைய பேர் என்னை பாராட்டினது… எனக்கு பெரிய உற்சாகத்தைக் கொடுத்துச்சு.

தொடர்ந்து, ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டில் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ‘காமசூத்ரா 3D’ படத்தின் இசையமைப்பில், ‘கோரல் அரேஞ்சர்’ (Choral arranger) வேலை பார்த்தேன். சுருக்கமா சொன்னா… பாடகர்களுக்கு ஏத்தி, இறக்கி பாடறதைச் சொல்லித் தர்ற வேலை. இந்தப் படம்… ‘பெஸ்ட் மோஷன் பிக்சர்’ (Best motion picture), ‘பெஸ்ட் ஒரிஜினல் சவுண்ட்’ (Best original sound), ‘பெஸ்ட் பேக்கிரவுண்ட் ஸ்கோர்’ (Best background score) போன்ற பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுச்சு. என்னோட இசைப் பயணத்துல.. இது, பெரிய மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம்! இப்போ, ‘சுழியம் 07’ என்ற தமிழ்ப் படத்துக்கு நான்தான் இசையமைப்பாளர். இன்னும் வாய்ப்புகள் வந்திட்டிருக்கு..!”
– குரலிலும் வழிகிறது இசை!

Leave a Reply