shadow

2100-ல் சென்னை கடலில் மூழ்குமா? ஆராய்ச்சியாளர்களின் அதிர்ச்சி தகவல்
chennai
நாளுக்கு நாள் பூமி வெப்பமடைந்து வருவதால் அண்டார்டிகா மற்றும் ஆர்டிக் பிரதேசங்கள் வேகமாக உருகி வருகின்றன. இதனால் கடல் மட்டம் உயர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் இந்த பனிப்படலங்கள் முழுவதுமாக உருகிவிட்டால் உலகின் மிக முக்கியமான நகரங்கள் கடலுக்குள் மூழ்கும் அபாயம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தங்கள் அச்சத்தை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஆய்வு செய்த ஆராய்ச்சியளர்கள் கூறியிருப்பதாவது: பூமி வெப்பமடைந்து வருவதால் உலகில் கடல் மட்டம் எட்டு அங்குலம் வரை உயர்ந்துள்ளதாகவும் இதனால் பல கடலோர பகுதிகள் மற்றும் தீவுகளின் கடற்கரை மட்டம் உயர்ந்து வருவதாக கூறியுள்ள ஆராய்ச்சியாளர்கள் தற்போது மிக வேகமாக உருகி வரும் கிரீன்லாந்து பனிப்படலங்களும் முழுமையாக உருகிவிட்டால் கடல் மட்டம் தற்போது உள்ளதை விட 23 அடி வரை வர  உயரலாம் என கூறியுள்ளார்.

அவ்வாறு உயர்ந்தால் உலகின் முக்கிய நகரங்களான சென்னை, மும்பை, துபாய், சிங்கப்பூர், ஷாங்காய், நியூயார்க், சிட்னி, இஸ்தான்புல், லண்டன், கேப்டவுன், டோக்கியோ  போன்ற நகரங்கள் நீரில் மூழுகும் அபாயம் இருபதாகவும் அமெரிக்காவின் 315 நகரங்களும் அபாய கட்டத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த நகரங்களுக்கு ஏற்படும் ஆபத்து குறித்து நீண்ட நாட்களுக்கு முன்பே தெரிவித்துள்ளதாகவும் 2100ம் ஆண்டில் கடல் மட்டம் 100 செ.மீட்டர் உயர்ந்து கடற்கரை நகரங்கள் விரைவில் அழியும் நிலை வரலாம் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply