shadow

0107chennai1கடந்த சனிக்கிழமை மாலை சென்னை போரூர் அருகேயுள்ளமுகலிவாக்க கட்டட விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் பூமிக்கடியில் புதைந்திருக்கக்கூடும் என்று கருதப்படுவதால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

சென்னை முகலிவாக்கத்தில் 11 மாடி கட்டடம் இடிந்து விழுந்த கோர விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தொடர்ந்து 6வது நாளாக மிட்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மீட்புப்பணியில் 750 போலீசார், 360 தீயணைப்புப் படை வீரர்கள், 402 தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஆகியோர் தீவிர பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோக தனியார் அமைப்புகளும் மீட்புப்பணிக்கு உதவிகள் செய்து வருகின்றது. இடிபாடுகளுக்கிடையே சிக்கியவர்களை கண்டுபிடிக்கும்  5 மோப்ப நாய்களும் பணியில் ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டிட இடிபாடுகளில் இருந்து காயங்களுடன் மீட்கப்படுபவர்களை உடனுக்குடன் சிகிச்சை அளிக்க விபத்து நடந்த பகுதியில் டெண்ட் அமைத்து 30 டாக்டர்கள் தயார் நிலையில் உள்ளனர். இவர்களுக்கு உதவியாக 100  நர்சுகள் கொண்ட குழுவும் தயார் நிலையில் உள்ளனர். விடிய விடிய 6வது நாளாக மீட்பு பணிகள் தொடர்ந்து வரும் நிலையில், விபத்தில் இதுவரை 27 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply