கடைசி லீக் போட்டியில் சென்னை அணி சூப்பர் வெற்றி: பஞ்சாபை விழ்த்தியது

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் லீக் போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று புனேவில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே கடைசி லீக் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச முடிவு செய்ததால் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்த போட்டியில் பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.

சென்னை மற்றும் பஞ்சாப் அணி போட்டியின் ஸ்கோர் விபரம்:

பஞ்சாப் அணி: 154/10 19.4 ஓவர்கள்

கே.கே.நாயர்: 54 ரன்கள்
திவாரி: 35 ரன்கள்
மில்லர்: 24 ரன்கள்

சென்னை அணி: 159/5 19.1 ஓவர்கள்

சுரேஷ் ரெய்னா: 61 ரன்கள்
சாஹர்: 39 ரன்கள்
ஹர்பஜன்சிங்: 19 ரன்கள்

ஆட்டநாயகன்: நிகிடி (சென்னை அணி)

இந்த போட்டியில் வெற்றி பெற்றதன்மூலம் சென்னை அணி 9 வெற்றிகள் பெற்று 18 புள்ளிகள் எடுத்துள்ளது. மேலும் புள்ளிப்பட்டியலில் ரன்ரேடி அடிப்பைடையில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *