சென்னை ஈ.வி.பி தீம் பார்க்கில் நடந்த விபத்து ஒன்றில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானப்பணிப்பெண் ஒருவர் பரிதாபமாக பலியானார். இதுதொடர்பாக ஈ.வி.பி தீம் பார்க்கின் மேனேஜர் உள்பட மூன்று பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பொங்கல் விடுமுறையை ஒட்டி சென்னையில் உள்ள அனைத்து தீம் பார்க்குகளிலும் பொதுமக்கள் உற்சாகமாக வருகை தந்து விடுமுறையாக ஜாலியாக கொண்டாடி வந்தனர். அதுபோலவே சென்னை பெங்களூர் சாலையில் உள்ள ஈ.வி.பி தீம் பார்க்கிற்கு விமானப்பணிப்பெண்ணாக பணிபுரியும் ஒருவர் தன் தோழிகளுடன் வருகை தந்தார். தீம் பார்க்கின் பல இடங்களில் சுற்றிய அவர்கள் கடைசியாக மிக உயரமான ராட்டினத்தில் சுற்றியபோது திடீரென தூக்கி வீசப்பட்டு கிழே விழுந்து படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பலியான விமானப்பணிப்பெண் சென்னையில் உள்ள இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவரது சொந்த மாநிலம் நாகலாந்து ஆகும். அவருடைய பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார் தீம் பார்க்கின் மேனேஜர் உள்பட மூன்று பேர்களை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். பலியான பெண்ணின் பெயரை தெரிவிக்க போலீஸார் மறுத்துவிட்டனர்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *