shadow

தமிழ் சினிமாவின் சொர்க்கபுரியில் ‘சென்னை 600028’ இசை வெளியீடு

chennai28பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சென்னை 600028’ 2ஆம் பாகத்தில் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது டப்பிங், பின்னணி இசை பணீகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் பாடல் வெளியீட்டை மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் பிரம்மாண்டமாக நடத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

சமீபத்தில் இந்த படத்திற்காக யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவான ‘பாய்ஸ் ஆர் பேக்’ மற்றும் ‘சொப்பன சுந்தரி’ ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த படத்தின் பாடல்கள் அக்டோபர் 7 ஆம் தேதி மலேசியாவில் வெளியாகவுள்ளது. இந்த விழாவில் யுவன்ஷங்கர் ராஜா, வெங்கட் பிரபு உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதுகுறித்து இயக்குனர் வெங்கட் பிரபு கூறும்போது, ‘தமிழ் திரைப்படங்களின் சொர்க்க வாசலாக கருதப்படும் ஒரு நாடு மலேசியா. ஒவ்வொரு படங்களையும் திருவிழாவாக கொண்டாடும் மலேசியா ரசிகர்கள்தான் அந்த சொர்க்க வாசலின் வலுவான தூண்கள். அத்தகைய அற்புதமான ரசிகர்கள் மத்தியில் எங்களின் ‘சென்னை 28’ இரண்டாம் பாகத்தின் இசை மற்றும் டிரைலரை வெளியிடுவதை பெருமையாக கருதுகிறோம்.

யுவன்ஷங்கர் ராஜா மீது மலேசிய ரசிகர்கள் வைத்திருக்கும் பேரன்பை மனதில் கொண்டு, அங்கே எங்களின் இசை மற்றும் டிரைலரை வெளியிட முடிவு செய்திருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply