shadow

முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார் புதிய தலைமை செயலாளர் கிரிஜா

தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக நியமனம் செய்யப்பட்ட கிரிஜா வைத்தியநாதன் சற்று முன்னர் தலைமைசெயலாளாராக பதவியேற்று கொண்டார்.

அவர் பதவியேற்ற ஒருசில நிமிடங்களில் தலைமை செயலகத்திற்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வந்தார். தலைமை செயலாளர் என்ற முறையில் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார் கிரிஜா வைத்தியநாதன்

புதிய முதல்வர், புதிய தலைமைச்செயலாளர் என்ற முறையில் இனி தமிழகத்தின் அரசு பணிகள் தூய்மையாகவும், கண்ணியமாகவும், மக்களின் பிரச்சனைகளை தீர்க்கும்படியாகவும் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.

Leave a Reply