shadow

cheating clean indiaசமீபத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி ‘தூய்மை இந்தியா’ என்ற திட்டத்தை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தினார். பிரபலங்கள் முதல் மாணவர்கள் வரை இந்த திட்டத்தில் ஈடுபட்டு இந்தியாவை தூய்மைப்படுத்தும் முயற்சியில் இறங்கி செயல்பட்டு வரும் நிலையில் டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா தலைவர் ஒருவர் மாநகராட்சி ஊழியர்கள் மூலம் குப்பைகளை இரவோடு இரவாக கொண்டு வந்து கொட்டி, அதன்பின்னர் மறுநாள் காலையில் மீடியாக்கள் முன்னிலையில் சுத்தப்படுத்துவது போல் போஸ் கொடுத்து போலி விளம்பரம் தேடிய ‘டூப்ளிகேட் தூய்மை இந்தியா’ குழுவுக்கு பொதுமக்களும் ஊடகங்களும் கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் இஸ்லாமிக் சென்டர் என்ற பகுதியில் டெல்லி மாநகராட்சி ஊழியர்களின் உதவியால் குப்பைகளை சேகரித்து தங்கள் பகுதியில் இரவோடு இரவாக கொட்டி பரப்பிவிட்டு, பின்னர் மறுநாள் காலையில் அந்த குப்பைகளை அகற்றுவது போல போஸ் கொடுத்த பாரதிய ஜனதா தலைவர்களில் ஒருவரான சதீஷ் உபத்யாய கையும் களவுமாக டுவிட்டர் பயனாளி ஒருவரிடம் மாட்டிக்கொண்டார்.

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”//bit.ly/1zBKUUL” standard=”//www.youtube.com/v/JE_Qbh4udP8?fs=1″ vars=”ytid=JE_Qbh4udP8&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep9182″ /]

இந்த நிகழ்ச்சியின் மூலம் பல பிரபலங்கள் இதுபோன்று நாடகங்கள்தான் ஆடுகின்றனர்களோ என்ற சந்தேகம் பொதுமக்களிடம் எழுந்துள்ளது. இந்த கேவலமான பொழைப்பு தேவைதானா என ஃபேஸ்புக், டுவிட்டர்களில் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி கூறுகையில், “இந்த நடவடிக்கையின் மூலம் பாரதிய ஜனதாவின் இரட்டை வேடம் அம்பலமானது. இதனால் டெல்லியில் பல இடங்களில் குப்பைகள் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.

 இந்த விவரம் இணையத்தில் பரவியதினால், தற்போது ட்விட்டரில் அனைவராலும் விவாதிக்கப்படும் விவகாரமாக தூய்மை இந்தியா மாறி உள்ளது. அனால் பிரதமர் மோடியின் கனவு திட்டம் #CheatingCleanIndia என்று கேலிகளுக்கு உள்ளாகி உள்ளது. ட்விட்டர்வாசிகள் தொடர்ந்து தூய்மை இந்தியா நடக்கும் முறைகளை கண்டித்து தங்களது கோபங்களுடன் பகிர்ந்து வருகின்றனர்.

Leave a Reply