காமன்வெல்த் மாநாட்டை படம் பிடிக்க பிரிட்டனின் சேனல் 4 தொலைக்காட்சிக்கு இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது.

அண்மையில் சேனல் 4 தொலைக்காட்சி இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்த கடைசிக் கட்ட போரில் மனித உரிமை மீறல் குறித்து “ஸ்ரீலங்கா கில்லிங் பீல்ட்ஸ்” என்ற பெயரில் டாக்குமென்டரி படம் வெளியிட்டது. பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த ஒளிபரப்பை தொடர்ந்து அந்த சேனலுக்கு இலங்கை அரசு தடை விதித்தது. இந்த நிலையில் இலங்கையில் விரைவில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டை படம் பிடிக்க சேனல் 4க்கு இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து இலங்கை தகவல் தொடர்பு அமைச்சர் கேகலியா ரம்புக்வெல்லா கூறியதாவது, இலங்கையில் நடந்த போர் குறித்து தவறான தகவலை சேனல் 4 ஒளிபரப்பியது. இருப்பினும் தனது தவறை திருத்திக்கொள்ள அந்த சேனலுக்கு ஒரு வாய்ப்பளிக்கிறோம் என்றார். முன்னதாக, சேனல் 4 ஊழியர்கள் வந்திறங்கிய கொழும்பு விமான நிலையத்தில் அந்த சேனலுக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டம் நடத்தினர்.

Leave a Reply