ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய வேண்டுமா? இன்று முதல் சிறப்பு மையங்கள்

ஒவ்வொரு இந்திய குடிமகனின் அவசிய தேவையான ஆதார் கார்டில் ஏதாவது திருத்தம் செய்ய வேண்டுமானால் இன்று முதல் அதற்கான வசதி செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

பொதுமக்களுக்கு தங்களுடைய ஆதார் அட்டையில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமானால் இன்று முதல்  வட்டாட்சியர் அலுவலகம், வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகம் மற்றும் மாநகராட்சி மண்டல மையங்கள் மூலம் இன்று முதல் திறுத்தம் செய்து கொள்ளலாம் என தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதே நேரத்தில் பிறந்த தேதி, பாலினம், முகவரி, கைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றைத் திருத்தம் செய்து கொள்ளவதற்கு ரூ.25 கட்டணமாகவும், ஆதார் விவரங்களை தாளில் அச்சிட்டு பெற்றுக் கொள்வதற்கு ரூ.10 கட்டணமாகவும் வசூலிக்கப்படும்.

மேலும் பொது மக்கள் தவறாமல் ஒப்புகைச் சீட்டை, மையத்தில் பணி புரியும் ஊழியர்களிடம் இருந்து பெற்றுச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *