shadow

chandhrikaஇலங்கையில் கடந்த ஜனவரி மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்ற நிலையில் விரைவில் அங்கு பிரதமரை தேர்வு செய்யும் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதனால் இலங்கை அரசியல் கட்சிகள் தற்போது முதலே தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.

விரைவில் நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளராக நிற்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க முடிவு செய்துள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சுதந்திர கட்சியிலிருந்து ஓரம் கட்டவே சந்திரிகா குமாரதுங்கா இந்த முடிவை எடுத்துள்ளதாக அக்கட்சியின் கூறி வருகின்றனர். எனவே வரும் தேர்தலில் சந்திரிகா குமாரதுங்கா வெற்றி பெற்று பிரதமராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே இலங்கை அதிபர் மைத்திரிபால சிறீசேன, 19வது திருத்தத்துக்கு ஆதரவு வழங்காவிட்டால் பாராளுமன்றத்தை கலைப்பதாக எச்சரிக்கை செய்ததை அடுத்து சுதந்திர கட்சியினர் அதிபரைச்  சந்தித்து 19வது திருத்ததுக்கு ஆதரவு தெரிவித்ததோடு, 20வது திருத்தமாக தேர்தல் முறைமையில் மாற்றத்தையும் கொண்டு வந்து நிறைவேற்றவும் இணக்கம் தெரிவித்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

Leave a Reply