shadow

6தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு போட்ட் ஓட்டு செல்லாது என தேர்தல் கமிஷன் நேற்று அதிரடியாக அறிவித்துள்ளது. இதனால் ஆந்திர அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தின் 7ஆம் கட்ட தேர்தல்நேற்று 9 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளில் நடைபெற்றாது. இதில் தெலுங்கானா மாநிலத்தில் பாராளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது.

நேற்று தெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு, ஐதராபாத், ஜூப்ளி ஹில்ஸ் வாக்குசாவடிக்கு குடும்பத்துடன் ஓட்டு போட வந்தார். ஓட்டுபோட்டுவிட்டு வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போது, ”நான் எனது வந்து தாமரை சின்னத்திற்கு ஓட்டு போட்டேன். என்னை போலவே அனைவரும் ஓட்டுரிமையை பயன்படுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார். ஓட்டு போட்ட ஒருவர் வெளியே வந்து எந்த கட்சிக்கு ஓட்டுபோட்டேன் என்று கூறுவது தேர்தல் கமிஷனின் விதிப்படி குற்றமாகும்.

இதுகுறித்து, தெலங்கானா மாநில தேர்தல் அதிகாரி பன்வர்லால் கூறுகையில், ”வாக்காளர்கள், தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை வெளிப்படையாக தெரிவிப்பது தேர்தல் விதிமுறைப்படி தவறாகும். சந்திரபாபு நாயுடு தனது வாக்குரிமையை பகிரங்கமாக அறிவித்ததையடுத்து, அவர் பதிவு செய்த வாக்கை நோட்டாவின் கீழ் செல்லாத ஓட்டாக அறிவிக்கிறோம்” என்றார்.

தேர்தல் அதிகாரியின் இந்த அறிவிப்பு காரணமாக ஆந்திர அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply