தனித்தெலுங்கானாவை எதிர்த்து தொடர்ந்து 5 நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த சந்திரபாபு நாயுடுவின் உடல்நிலை மிக மோசமாக இருந்த நிலையில், அவர் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

தனித்தெலுங்கானா உருவாவதை எதிர்த்து, சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவின் உடல் நிலை மோசமானதை அடுத்து அவரை போலீசார் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

டெல்லியில் உள்ள ஆந்தர பவனின் கடந்த 5 நாட்களுக்கு முன் சந்திரபாபு நாயுடு சாகும்வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினர்.

இந்நிலையில், இன்று சந்திரபாபு உடல்நிலை மோசமானது. இவரை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தினர். ஆனால் அவரது ஆதரவாளர்கள் பலர் திரண்டு, போலீசாரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. ஆனால், இறுதியில் போலீசார் சந்திரபாபு நாயுடுவை மருத்துவமனைக்கு வலுக்கட்டாயமாக அழைத்து சென்றுள்ளனர்.

Leave a Reply