மது குடிக்கும் காசுக்கு இதை செய்யுங்கள். சந்திரபாபு நாயுடு கூறுவதை எதை?
chandra babu
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் பேசினார். விஜயவாடா மாவட்டத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அவர் பேசியபோது, “மேலை நாடுகளில், ஒரு நாளைக்கு ஒரு ‘பெக்’ அளவுக்குத்தான் மது குடிப்பார்கள். அவர்கள் ஒருபோதும் அளவுக்கு அதிகமாக மது குடிப்பதில்லை. ஆனால், நம் நாட்டில் ஒரு தடவை மது பாட்டிலை எடுத்தால், முழு பாட்டிலையும் குடித்து காலி செய்து விடுகிறார்கள்.

பிறகு மது போதையில் வீட்டில் உள்ள மனைவியை அடித்து துன்புறுத்துகிறார்கள். மது அருந்திவிட்டு பெண்களை கை நீட்டி அடிப்பது என்பது மிகவும் மோசமான பழக்கம். அதில் என்ன வீரம் இருக்கிறது? அதனால், ஆண்கள் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு மனைவியை அடித்து துன்புறுத்தும் அநாகரீகத்தை கைவிட வேண்டும்.

இப்படி மது குடிப்பதற்கு பதில் அந்த பணத்தில் மரக்கன்று வாங்கி நடலாம். அது மிகப்பெரும் புண்ணியத்தை உங்களுக்கு தேடி தரும். சிலர் ஓய்வு நேரத்தில் பொழுது போக்குவதற்கு சீட்டு விளையாடுகிறார்கள். இல்லையெனில் மது குடிக்க போய் விடுகிறார்கள். இப்படியெல்லாம் பணத்தை வீணடிக்கக் கூடாது”

இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *