shadow

மோடி அரசு கூட்டாட்சிக்கு மதிப்பளிக்கவில்லை. சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

பா.ஜனதா தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணியில் இருந்து சமீபத்தில் வெளியேறிய ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி கடந்த சில மாதங்களாக பாஜகவையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சனம் செய்து வந்தது.

இந்த நிலையில் மக்கள் உணர்வுகளை புரிந்து கொள்வதில் பாஜக தோல்வி அடைந்து விட்டதாகவும், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் மற்றும் அசாம் பிரச்சினைகளை கையாள்வதில் காங்கிரஸ் செய்த அதே தவறுகளை பாஜக தொடர்ந்து செய்வதாகவும் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

மேலும் மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு கூட்டாட்சி தத்துவத்துக்கு மதிப்பளிக்கவில்லை என்றும் பொருளாதார வளர்ச்சியில் இந்த அரசு தோல்வி அடைந்து விட்டதாகவும் கூறிய சந்திரபாபு நாயுடு, பாஜக ஆட்சி சிறப்பாக செயல்பட்டு இருந்தால் பொருளாதார வளர்ச்சி மிகவும் மேம்பட்டு இருக்கும் என்றும் கூறினார்.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளை மிகப்பெரும் சவாலாக தெலுங்கு தேச கட்சி கருதவில்லை என்றும், வரும் ஆந்திர சட்டமன்ற தேர்தலில் முழு மெஜாரிட்டியுடன் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Leave a Reply