இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலிக்கு பி.எம்.டபிள்யூ. கார் பரிசு

நேற்று நடந்த மகளிர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் 9 ரன்களில் கோப்பையை நழுவ விட்டாலும் இந்திய வீராங்கனைகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. குறிப்பாக கேப்டன் மிதாலி ராஜ் அவர்களுக்கு பிரதமர், அமைச்சர்கள் மற்றும் சச்சின், சேவாக் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்ற்னர்.

இந்த நிலையில் கேப்டன் மிதாலி ராஜ்-க்கு பி.எம்.டபிள்யூ காரை பரிசாக அளிக்க உள்ளதாக, ஜூனியர் கிரிக்கெட் அணியின் முன்னாள் தேர்வுக் குழு தலைவர் சாமுண்டீஸ்வர்நாத் தெரிவித்துள்ளார். இந்திய அணியில், கடந்த 17 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டுவரும் மிதாலியை கவுரவிக்கும் வகையில் இந்த கார் பரிசளிக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே கடந்த 2007ஆம் ஆண்டு மிதாலிக்கு சாமுண்டி அவர்கள் செல்ரோலட் காரை பரிசளித்திருந்தார். இப்போது உலகக்கோப்பைக்கு இந்திய அணியை கொண்டு சென்றதற்காக பிஎம்டபிள்யூ காரை பரிசளிக்கிறார். இதுகுறித்து சாமுண்டி செய்தியாளர்களிடம் கூறியப்போது, ‘இந்திய மகளிர் கிரிக்கெட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார் மிதாலி. இந்திய அணியை அவர் வழிநடத்திய விதம் மறக்க முடியாதது’ என்ற கூறினார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *