shadow

cr_mega_482_rbi09இந்தியாவில் நடைபெற்று வரும் ஆக்கபூர்வமான பணிகளுக்கு எதிராக போராடும்படி தூண்டுவதற்காக இந்திய தொண்டு நிறுவனங்களுக்கு வெளிநாட்டில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் நிதி வருகிறது என இந்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்து தீவிர நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் இயங்கி வரும் ‘கிரீன்பீஸ் இந்தியா’ என்ற தொண்டு நிறுவனத்துக்கு ‘கிரீன்பீஸ் இன்டர்நேஷனல்’, ‘கிளைமேட் ஒர்க்ஸ் பவுண்டேஷன்’ என்ற 2 வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து அடிக்கடி கோடிக்கணக்கான ரூபாய்கள் நிதி வருவதை இந்திய உளவுப்பிரிவு கண்டுபிடித்து அதை பிரதமர் அலுவலகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

இதன் அடிப்படையில் மத்திய அரசு, இந்திய ரிசர்வ் வங்கிக்கு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி அனைத்து வங்கிகளும் அரசு துறைக்கோ அல்லது ஏதாவது நிறுவனத்துக்கோ வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து நிதி வந்துள்ளதா? என்பதை தெரிவிக்க வேண்டும். அதேபோல தொண்டு நிறுவனங்களும் தங்களுக்கு வந்துள்ள வெளிநாட்டு நிதி பற்றிய விவரங்களை ரிசர்வ் வங்கிக்கு தெரியப்படுத்த வேண்டும்.

மேலும் அயல்நாட்டு நிறுவனங்களிடம் இருந்து நிதி பெறுவதற்கு அந்த தொண்டு நிறுவனம் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் முன் அனுமதி பெற்றுள்ளதா என்பதையும் ரிசர்வ் வங்கி கண்காணிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய உத்தரவால் வெளிநாட்டில் இருந்து நிதிபெறும் தொண்டு நிறுவனங்கள் கலக்கம் அடைந்துள்ளன

Leave a Reply