shadow

நேதாஜி விவகாரத்தில் மேற்குவங்க அரசை மத்திய அரசு பின்பற்ற வேண்டும். மம்தா
nethaji
நேதாஜியின் ஆவணங்களை நாங்கள் வெளியிட்டது போல மத்திய அரசும் வெளியிட வேண்டும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

நேதாஜி குறித்த ரகசிய ஆவணங்களை மத்திய மற்றும் மேற்குவங்க அரசு வெளியிட வேண்டும் பல வருடங்களாக அவருடைய உறவினர்கள் வற்புறுத்தி வரும் நிலையில் கடந்த வாரம் மேற்குவங்க அரசு, தன்னிடம் இருந்த ஆவணங்களை ஆராய்ந்து வெளியிட்டது. இதில் நேதாஜி 1948வரை உயிருடன் இருந்தார் என்பது நிரூபணம் ஆனது. மேலும் பல முக்கிய தகவல்களை பொதுமக்கள் தெரிந்து கொண்டனர்.

இந்நிலையில் நேற்று சட்டப்பேரவையில் பேசிய மேற்குவங்க முதல்வர் மம்தா, ” “நேதாஜி பற்றிய 64 கோப்புகளை நாங்கள் வெளியிட்டுள்ளோம். நம் நாட்டுக்கு நேதாஜி ஆற்றிய பணிகள் எண்ணில் அடங்காதவை. ஆனால் இவை முழுமையாக மதிப்பிடப்படவில்லை. எனவே மேற்கு வங்க அரசைப் பின்பற்றி, நேதாஜி குறித்த ரகசிய கோப்புகளை மத்திய அரசும் வெளியிட வேண்டும்.

1937 முதல் 1947 வரை அமைச்சரவை முடிவுகள் தொடர்பான கோப்புகளையும் டிஜிட்டல் வடிவில் மாநில அரசு வெளியிடும்” என்றார். மம்தாவின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Leave a Reply