சென்ட்ரல் கோல்பீல்டு லிமிடெட் என்பது அக்டோபர் 2007 முதல் ஒரு மினிரத்னா நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இது கோல் இந்தியா லிமிடெட் என்ற 8 கிளை நிறுவனங்களைக் கொண்ட சி.சி.எல்., நிறுவனத்திலிருந்து பிரித்து உருவாக்கப்பட்டது. தற்சமயம் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தியில் இந்த நிறுவனம் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இந்த நிறுவனத்தில் டெக்னிகல் பிரிவில் உள்ள பல்வேறு காலி இடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பிரிவுகள் மற்றும் காலி இடங்கள்: சென்ட்ரல் கோல்பீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் சிவில் ஓவர்சியர் பிரிவில் 9 இடங்களும், எலக்ட்ரிகல் பிரிவுஅஸிஸ்டெண்ட் போர்மேன் பிரிவில் 251 இடங்களும், நான்-எக்ஸிக்யூடிவ் எலக்ட்ரீசியன் டெக்னீசியன் பிரிவின் இரண்டு பிரிவுகளில் முறையே 74 மற்றும் 319 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன்.

வயது : 30.10.2013 அடிப்படையில் 18 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: சிவில் ஓவர்சியர் பதவிக்கு பத்தாம் வகுப்பு மற்றும் இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பை தொடர்புடைய பிரிவில் முடித்திருக்க வேண்டும். இதர பதவிகளுக்கு பத்தாம் வகுப்புடன் ஐ.டி.ஐ., படிப்பை தொடர்புடைய பிரிவில் முடித்திருக்க வேண்டும். இவற்றுடன் அப்ரெண்டிஸ் பயிற்சி, சிறப்பு சான்றிதழ் போன்றவை கூடுதலாக தேவைப்படும்.

தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை : ரூ.100/-க்கான தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் டி.டி.,யை “”ஸென்ட்ரல் கோல்‌ஃபீல்ட்ஸ் லிமிடெட்” என்ற பெயரில் ராஞ்சியில் மாற்றத்தக்கதாக எடுத்து அனுப்ப வேண்டும். ஆன்-லைனில் விண்ணப்பித்து இதன் பின்னர் கிடைக்கும் பிரிண்ட் அவுட்டுடன் உரிய இணைப்புகளை பின்வரும் முகவரிக்கு
அனுப்ப வேண்டும்.”The General Manager (Recruitment), Recruitment Department, 2nd Floor, Damodar Building, Central Coalfields Limited, Darbhanga House, Ranchi834029”

விண்ணப்பிக்க இறுதி நாள் : 14.12.2013

விபரங்கள் அறிய பார்க்க வேண்டிய இணையதளம் : <ofbindia.gov.in/index.php?wh=aboutus&lang=en>

Leave a Reply