shadow

பெங்களூரில் குவிந்த மத்திய படைகள். ஊரடங்கு உத்தரவால் இன்று அமைதி

bangaloreபெங்களூரில் நேற்று கட்டுக்கடங்காத வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டதால் தமிழத்தை சேர்ந்த பல வாகனங்கள் தீக்கிரையாகின. இந்நிலையில் 144 ஊரடங்கு உத்தரவு நேற்று மாலை முதல் பெங்களூரில் அமலில் உள்ளது. மேலும் துணை ராணுவ படையும் பதட்டம் நிறைந்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதால் இன்று காலை முதல் எவ்வித அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை என்றும் ஆனாலும் ஒருவித பதட்டமான சூழ்நிலையே இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

நாளை மாலை வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பண்டவப்புரா, மாண்டியா, மைசூரு பகுதிகளிலும் சில இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படும் 4 அணைப் பகுதிகளிலும் ஊரடங்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் துணை நிலை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணிக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே துணை நிலை ராணுவ வீரர்களின் 10 கம்பெனி படை பெங்களூரில் உள்ளது. மொத்தம் 20 கம்பெனி மத்திய படை வீரர்கள் பெங்களூரில் முக்கிய பகுதிகளில் ரோந்து சுற்றி வருகிறார்கள்

Leave a Reply