18கடந்த சனிக்கிழமை மாயமான மலேசியா விமானத்தை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தீவிரமடைந்து வரும் நிலையில் அந்த விமானத்தில் பயணம் செய்தவர்களின் செல்போன்கள் வேலை செய்வதாக வந்துள்ள தகவல்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சீனாவில் விமானத்தில் பயணம் செய்த உறவினர்கள் ஒரு சிலர் விமானத்தில் பயணம் செய்தவர்களின் செல்போன் நம்பர்களுக்கு டயல் செய்தபோது, அந்த செல்போன்கள் ரிங் ஆவதை கண்டு ஆச்சரியம் அடைந்தனர். உடனடியாக சீனாவில் புகழ் பெற்ற QQ என்ற சமூக வலைத்தளத்தில் இந்த தகவலை பதிவு செய்தனர்.

சீனப்போலீஸாரிடம் இந்த தகவலை சொல்லி, செல்போன் டவரை வைத்து விமானம் இருக்குமிடத்தை கண்டுபிடிக்குமாறு அவர்கள் கேட்டுக்கொண்டனர். மேலும் இரண்டு போலி பாஸ்போர்ட்டுக்களில் பயணம் செய்தவர்களின் விபரங்களும் தற்போது தெரிய வந்துள்ளது. அவர்கள் இருவரும் போலி பாஸ்போர்ட்டுகளில் சென்றிருந்தாலும், அவர்கள் தீவிரவாதிகள் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. எனவே இது விமான விபத்துதான் என்றும், யாரும் விமானத்தை கடத்தவில்லை என்பதும் உறுதியானது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *