மெரினாவில் வாகன கட்டணம் வசூல்: அதிர்ச்சியில் காதலர்கள்

சென்னை மெரீனா சென்னைவாசிகளுக்கு ஒரு மிகப்பெரிய இலவச பொழுதுபோக்கிடம் என்பதில் சந்தேகம் இல்லை. வாகன கட்டணம் கூட எத்தனை மணி நேரம் என்றாலும் பார்க்கிங் செய்துவிட்டு பொழுதை கழிக்கலாம். குறிப்பாக காதலர்களுக்கு மெரினா தங்களுடைய சொர்க்கபூமியாக இருந்தது

இந்த நிலையில் சென்னை மெரினா கடற்கரை மற்றும் எலியட்ஸ் கடற்கரையில் வாகனங்களை நிறுத்த இனி கட்டணம் வசூலிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

காதலர்கள் உள்பட ஒருசிலர் தங்களுடைய வாகனங்களை மணிக்கணக்கில் நிறுத்துவதால் இந்த பகுதியில் பெரும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதை தடுக்கவே வாகனங்களுக்கு கட்டணங்களை வசூலிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளதாகவும், ஒரு மணி நேரத்துக்கு காருக்கு ரூ.20 என்றும் பைக்கிற்கு ரூ. 5 என்றும் வசூலிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *