shadow

சென்னையில் ஐபிஎல் நடக்குமா? வலுக்கும் போராட்டங்கள்

காவிரி மேலாண்மை வாரிய பிரச்சனை குறித்த போராட்டங்கள் தமிழகத்தில் கொழுந்துவிட்டு எரியும் நிலையில் போராட்டக்காரர்களின் பார்வை தற்போது ஐபிஎல் போட்டியை நிறுத்துவதில் திரும்பியுள்ளது. ஐபிஎல் போட்டிக்கு எதிராக அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருவதால் சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடக்குமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

ஏற்கனவே கடந்த 2013ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடந்தபோது இலங்கை வீரர்கள் அணியில் இருந்தால் ஐபிஎல் போட்டியை நடத்தவிடமாட்டோம் என்ற பிரச்சினை உருவானது. அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா இதுகுறித்து கடிதமே எழுதினார். போட்டியும் வெளி மாநிலத்துக்கு மாற்றப்பட்டது.

இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் பரவி வரும் கருத்துக்கள் பின்வருமாறு:

மெரினாவில் போராட தடை எதற்கு? மெரினாவுக்கு போகணும். இருக்கவே இருக்கு சேப்பாக்கம் மைதானம், டிக்கெட் எடு கொஞ்சம் சாப்பாடு தண்ணீர் எல்லாம் வாங்கிட்டு உள்ளபோ,

மேட்ச் நல்லா பாரு எவன் தோற்றாலும் வென்றாலும் இடையில் நமது பலகைகளை உலகம் எங்கும் தெரிய காண்பி

போட்டி முடிந்ததும் மைதானத்தை விட்டு எவனும் வெளிய வராதே, அவ்வளவு பெரிய மைதானம் 40 ஆயிரம் பேரு உள்ளே போகலாம் உலகம் முழுவதும் இது பெரிய அளவில் பேசப்படும். மாற்றி யோசியுங்கள்”

“தோனிக்கும் கோலிக்கும் பதாகை தூக்குவதை விட நீ உண்ணும் உணவுக்காக, உன் வயிற்றுச்சோறுக்காக தன் உயிரைக் கொடுத்துப் போராடும் விவசாயிக்காக ஒருநாள் நீ போராடி பதாகையை ஏந்திப்பிடி, அதில் தவறு இல்லை” இவ்வாறு பதிவிட்டுள்ளனர்.

எது எப்படியோ ஐபிஎல் போட்டியில் கிரிக்கெட்டும், சிக்சரும் விளையாட்டின் பரபரப்பும் இருக்கும் போதே அரசியலுக்கும் பஞ்சமிருக்காது என தெரிகிறது

Leave a Reply