shadow

காவிரி வழக்கு: மேலும் அவகாசம் கேட்ட மத்திய அரசு, தமிழகம் அதிருப்தி

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்த சுப்ரீம் கோர்ட், இதுகுறித்த வரைவு திட்டத்தை மே 3ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. அந்த வகையில் இன்று மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது காவிரி வரைவு செயல் திட்டத்தை மத்திய அரசு இன்று தாக்கல் செய்யவில்லை. பிரதமர் கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருப்பதால் ஒப்புதல் பெற முடியவில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது.

மத்திய அரசின் சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் இன்று இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டில் கூறியபோது, ‘காவிரி வரைவு செயல் திட்டம் தயாராகிவிட்டது. ஆனால், பிரதமர் கர்நாடக மாநிலத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டிருப்பதால் அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற முடியவில்லை. எனவே, கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும்’ என அவர் கேட்டுக்கொண்டார்.

இதன்படி காவிரி வரைவு செயல் திட்டம் குறித்து இதுவரை மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து அறிக்கையை வரும் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி இந்த வழக்கை வரும் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தது. இந்த விவகாரத்தில் மீண்டும் மத்திய அரசு கால அவகாசம் கேட்டது தமிழகத்தை அதிருப்தி அடைய செய்துள்ளது.

Leave a Reply