shadow

காவிரி விவகாரம்: மீண்டும் கால அவகாசம் கேட்கும் மத்திய அரசு

: காவிரி நதிநீர் பங்கீடு குறித்து நடுவர் மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை செயல்படுத்த செயல் திட்டத்தை (ஸ்கீம்) 6 வார காலத்திற்குள் மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. ஆனால், ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. மேலும் தீர்ப்பை நடைமுறைப்படுத்த 3 மாதம் அவகாசமும் கேட்டது.

அதேசமயம் தீர்ப்பை அமல்படுத்த தவறிய மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. விசாரித்த சுப்ரீம் கோர்ட், மே 3-ம் தேதிக்குள் மத்திய அரசு வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இந்த காலக்கெடு முடிய இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், மத்திய அரசு சார்பில் இன்று சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு செயல் திட்டத்தை உருவாக்க அளிக்கப்பட்ட கால அவகாசம் போதவில்லை என்றும், மேலும் 2 வாரம் அவகாசம் தேவை என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்றுள்ளது. இதன் மீது விரைவில் விசாரணை நடத்தப்பட உள்ளது.

Leave a Reply