கேதரின் தெரசாவுக்கு கலைப்புலி எஸ்.தாணு கொடுத்த பட்டம்
trisha and catherine
‘மெட்ராஸ்’ படத்தில் அறிமுகமான நடிகை கேதரின் தெரசா நடித்த ‘கதகளி’ திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில் அவர் நடித்த மற்றொரு படமான ‘கணிதன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு கேதரின் தெரசா குறித்து கூறியபோது, ‘கோலிவுட்டில் கேதரின் தெரசாவுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. அவருடைய நடிப்பு ஹேமாமாலினியை ஞாபகப்படுத்துவதால் அவரை தமிழ் சினிமாவின் ஹேமாமாலினி என்ற பட்டம் கொடுப்பதாக கூறியுள்ளார்.

‘கணிதன்’ படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்துள்ள கேதரின் தெரசா இதுவரை இல்லாத அளவில் கிளாமராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. சயின்ஸ் பிக்சன் படமான ‘கணிதன் திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களின் உதவி இயக்குனர் டி.என்.சந்தோஷ் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.

‘கணிதன்’ படத்தை தவிர ‘வீரதீர சூரன்’ மற்றும் ‘முத்துராமலிங்கம்’ ஆகிய தமிழ் படங்களிலும் ஒரு தெலுங்கு படத்திலும் கேதரின் தெரசா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *