car entered shoe shop

அமெரிக்காவில் உள்ள Wayne என்ற நகரில் வேகமாக வந்த கார் ஒன்று நிலைதடுமாறி ஷூ கடை ஒன்றினுள் புகுந்து விபத்துக்குள்ளானது. இதனால் ஷூ கடை முற்றிலும் சேதமடைந்ததோடு பலர் காயமடைந்தனர்.

அமெரிக்காவில் உள்ள Wayne என்ற நகரில் Swedesford Road என்ற சாலையில் Famous footwear என்ற புகழ்பெற்ற ஷூ கடைக்குள் நேற்று இரவு கார் ஒன்று புகுந்து விபத்துக்குள்ளானது. மிக வேகமாக வந்த அந்த கார், திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஷு கடைக்குள் புகுந்தது. ஷூ கடைக்குள் இருந்த வாடிக்கையாளர்கள் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.கடையின் பெரும்பாலான பொருட்கள் சேதமடைந்தது. சேத மதிப்பு இன்னும் மதிப்பிடப்படவில்லை.

விபத்துக்குள்ளான காரை 75 வயது நபர் ஒருவர் ஓட்டிக்கொண்டு வந்துள்ளார். தற்போது அவர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தில் காயம் அடைந்த ஒருவர் மட்டும் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

24949221_BG1

car in shoe store 1

car in shoe store 2

car in shoe store 3

Leave a Reply