shadow

ஓபிஎஸ் ராஜினாமாவை திரும்ப பெற முடியுமா? முன்னாள் அட்டர்னி ஜெனரல் கருத்து

மக்கள் விரும்பினால் தனது ராஜினாமாவை வாபஸ் பெற்றுவிட்டு மீண்டும் முதல்வர் பதவியை ஏற்பேன் என்று தமிழக முதல்வர் ஓபிஎஸ் பேட்டி ஒன்றில் கூறினார். ஆனால் இது சட்டப்படி சாத்தியப்படுமா? என்று முன்னாள் அட்டார்னி ஜெனரல் சோலி சொரப்ஜி அவர்களிடம் கருத்து கேட்டபோது, ‘முதலமைச்சர் பன்னீர் செல்வத்தால் தன்னுடைய ராஜினாமாவை திரும்ப பெற முடியாது’ என்று கூறியுள்ளார்

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

தமிழகத்தில் தற்போது வினோதமான அரசியல் சூழல் நிலவி வருகிறது. சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அடுத்த வாரம் வரவுள்ள நிலையில் ஆளுநர் காத்திருப்பதில் தவறில்லை.

தீர்ப்பு வருவதற்கு வாரங்களோ, மாதங்களோ இல்லை. வெள்ளி அல்லது திங்களன்று தீர்ப்பு வரவிருப்பதால் காத்திருக்கலாம். நல்ல காரணங்களுக்காக ஆளுநர் பதவியேற்பை ஒத்தி வைக்கலாம்.

முதலமைச்சர் ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டார். அதனை ஆளுநரும் ஏற்றுக்கொண்டு விட்டார். இதன் பின்னர் ராஜினாமாவை திரும்ப பெற முடியாது.

இவ்வாறு முன்னாள் அட்டார்னி ஜெனரல் சோலி சொரப்ஜி கருத்து தெரிவித்தார்.

Leave a Reply