சந்தனக்கடத்தல் வீரப்பன் கூட்டாளிகள் நான்கு பேர்களுக்கு அளிக்கப்பட்ட தூக்கு தண்டனையை குறைக்க கோரி நால்வரும் தொடர்ந்த வழக்கில், அவர்களுக்கு ஆயுள்தண்டனையாக குறைத்து இன்று சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

1993 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் வீரப்பனின் கூட்டாளிகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் 22 காவல்துறையினர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் வீரப்பனின் சகோதரர் ஞானப்பிரகாசம் உள்பட நான்கு பேர்களுக்கு கடந்த 2004ஆம் ஆண்டு தூக்கு தண்டனை அளித்தது.

அதன்பின்னர் தூக்குதண்டனை கைதிகளான நால்வரும் குடியரசு தலைவருக்கு கருணை மனு அனுப்பினர். ஒன்பது ஆண்டுகளுக்கு பின்னர் குடியரசு தலைவர் கருணை மனுவை கடந்த ஆண்டு நிராகரித்தார். இதையடுத்து தங்கள் தண்டனையை குறைக்க கோரி மீண்டும் கடந்த வருடம் பிப்ரவரியில் நால்வரும் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவின் மீதான விசாரணை முடிந்து இன்று காலை 10 மணியளவில் தீர்ப்பளிக்கப்பட்டது.

இதன்படி வீரப்பன் சகோதரர் ஞானப்பிரகாசம், பிலவேந்திரன் , மீசை மாதையன்,சைமன் ஆகியோர்களுக்கு வழங்கிய தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.

Leave a Reply