கனடாவில் ஐஸ் ஹாக்கி வீரர்கள் விபத்தில் பலி: பிரதமர் அஞ்சலி

கனடாவில் நடந்த விபத்து ஒன்றில் பலியான ஐஸ் ஹாக்கி வீரர்களின் அஞ்சலி நிகழ்ச்சியில் அந்நாட்ட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ருடாவ் கலந்து கொள்ளவுள்ளார். இதே நிகழ்ச்சியில் முன்னாள் ஹாக்கி வீரர்கள் உள்பட பலர் பங்கேற்க உள்ளனர்.

கனடாவில் உள்ளூர் ஐஸ் ஹாக்கி போட்டியில் விளையாடுவதற்காக ஜுனியர் அணி வீரர்கள் நேற்று முன்தினம் பேருந்து ஒன்றில் சென்றபோது சாஸ்கட்சேவான் மாகாணத்தின் திஸ்டேல் நகருக்கு அருகில் திடீரென ஏற்பட்ட விபத்தில் சிக்கி அந்த பேருந்தில் சென்ற ஐஸ்ஹாக்கி 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த நிலையில், விபத்தில் பலியான ஐஸ் ஹாக்கி வீரர்களின் அஞ்சலி நிகழ்ச்சியில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ருடாவ் மற்றும் முன்னாள் ஹாக்கி வீரர்கள் உள்பட பலர் பங்கேற்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும் பேருந்து விபத்தில் சிக்கி ஐஸ் ஹாக்கி வீரர்கள் 15 பேர் பலியானதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *