shadow

அமெரிக்கா விரட்டி அடித்தால் எங்கள் நாட்டுக்கு வாருங்கள். அகதிகளுக்கு கனடா பிரதமர் அழைப்பு

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதில் இருந்தே பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மெக்சிகோ எல்லையில் சுவர், இஸ்லாமியர்களுக்கு எதிரான நடவடிக்கை, அகதிகளை அமெரிக்காவில் இருந்து வெளியேற்றுவது ஆகிய நடவடிக்கைகளை அவர் எடுத்து வருகிறார். அவரது இந்த அதிரடிக்கு ஃபேஸ்புக், டுவிட்டர் நிறுவன சி.இ.ஓக்கள் உள்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள அகதிகளை குறிப்பாக சிரியா அகதிகளை விரட்டியடிப்போம் என டொனால்ட் கூறி வருகிறார். இந்நிலையில் அமெரிக்காவின் அண்டை நாடான கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடே ‘அமெரிக்கா அகதிகளை அந்நாட்டில் இருந்து விரட்டி அடித்தா. நாங்கள் அரவணைப்போம். எங்கள் நாட்டுக்கு தாராளமாக வாருங்கள் என கூறியுள்ளார்.

அவரது இந்த அழைப்பு காரணமாக அவரின் புகழ் உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது. சிரியாவை சேர்ந்த சிறுவன் துருக்கி கடற்கரையில் இறந்த சம்பவம் கனடா நாடாளுமன்றத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதையடுத்து அகதிகள் மீதான கருணை அந்நாட்டு மக்களுக்கு முன்பைவிட அதிகமாகிவிட்டதாக அகதிகள் தரப்பில் கூறப்படுகிறது.

Leave a Reply