தமிழர்களுடன் பொங்கல் கொண்டாடிய கனடா பிரதமர்

கனடா நாட்டில் இந்தியர்களுக்கு குறிப்பாக தமிழகத்தில் நல்ல மரியாதை இருந்து வருகிறது என்பது தெரிந்ததே. அமெரிக்காவின் விசா கெடுபிடியால் தற்போது தமிழர்கள் உள்பட பல இந்தியர்கள் கனடாவுக்கு சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று கனடா பிரதமர் ஜஸ்டின் கனடாவில் உள்ள தமிழர்களுடன் பொங்கல் விழாவை கொண்டாடினார். மேலும் அவர் தனது டுவிட்டரில் ‘இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்கள்’ என்று குறிப்பிட்டு இன்று ஸ்கார்பிரெள நகரில் தமிழர்களுடன் தை பொங்கல் விழா கொண்டாடியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்’ என்றும் தெரிவித்துள்ளார்.

தங்களுடன் தைப்பொங்கல் விழாவை கொண்டாடிய பிரதமர் ஜஸ்டின் அவர்களுக்கு கனடிய தமிழ் மக்களும் உலக தமிழர்களும் நன்றி கூறி வருகின்றனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *