24 திருமணம் செய்து 149 குழந்தைகள் பெற்ற மதத்தலைவருக்கு ஜெயில்

கனடா நாட்டில் 24 பெண்களை திருமணம் செய்து 149 குழந்தைகளை பெற்ற கிறிஸ்துவ மத தலைவர் ஒருவரை வீட்டுக்காவலில் வைக்கும்படி அந்நாட்டின் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கனடாவில் பல திருமணம் செய்வதற்கு தடை இருந்து வரும் நிலையில் இந்த தடையை மீறி பல பெண்களை திருமணம் செய்து கொள்வது ஒருசிலருக்கு வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் 61 வயது நபர் ஒருவர் 24 பெண்களை திருமணம் செய்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. அவரது பெயர் வின்ஸ்டென்ட் பிளாக்மோர். இவர் கிறிஸ்தவ அமைப்பு ஒன்றின் ஆலய மத தலைவராக இருந்து வருகிறார்.

இளம் வயதில் இருந்தே திருமணம் செய்துகொள்ள தொடங்கிய இவர் சமீபகாலம் வரை தொடர்ந்து திருமணம் செய்துள்ளார். அவர் திருமணம் செய்தவர்களில் பலர் 15 வயதுடைய சிறுமிகள்.

24 மனைவிகள் மூலம் அவருக்கு 149 குழந்தைகள் உள்ளனர். பலதார திருமணம் தொடர்பாக அவர் மீது பிரிட்டிஸ் கொலம்பியா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அவரை 6 மாதத்திற்கு வீட்டு காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *