shadow

ஆபாச நடிகை போல் மாற $50 ஆயிரம் செலவு செய்த இளம்பெண்

கனடாவை சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவர் தனது வீட்டின் அருகில் உள்ள ஆபாச நடிகையின் உடலமைப்பு போல் மாற 50ஆயிரம் அமெரிக்க டாலர் செலவு செய்து தற்போது துக்கத்தில் உள்ளார்.

விக்கி பெலிட்டியர் என்ற இளம்பெண் தன்னுடைய பக்கத்து வீட்டில் இருந்த ஆபாச நடிகையின் உடலமைப்பை கண்டு வியந்துள்ளார். தானும் அவரை போலவே மாற வேண்டும் என்பதற்காக பல அறுவை சிகிச்சைகள், பிளாஸ்டிக் சர்ஜரிகளை செய்துள்ளார். இதுவரை இதற்காகவே அவர் 50 ஆயிரம் அமெரிக்க டாலர் வரை செலவு செய்துள்ளார்.

மார்பகங்களை பெரிதாக்குவது, பின்பக்கத்தை பெரிதாக்குவது போன்றவற்றிற்காக அவர் அடிக்கடி ஊசி போட்டுள்ளார். தற்போது அதுவே அவருக்கு சிக்கலை கொடுத்துள்ளது. உடல் முழுவதும் வலியால் அவர் அவதிப்பட்டு தற்போது வலிக்கு சிகிச்சை செய்து வருகிறார்.

Leave a Reply