அதிர்ச்சியில் டிரம்ப்

கொரோனா வைரஸ் உலக நாடுகளை ஆட்டிப் படைத்து வரும் வேளையில் அமெரிக்காவில் மிகப் பெரும் சேதத்தை ஏற்படுத்துள்ளது. அந்நாட்டில் இதுவரை 7 லட்சத்து 40 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் அண்டை நாடான கனடாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33, 383 ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,470 ஆகவும் உள்ளது. அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் கனடாவில் கொரோனா பெருமளவு கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த நிலையில் கனடா மக்களின் பாதுகாப்பு கருதி அமெரிக்க எல்லைப் பகுதி சாலைகள் மேலும் 30 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்றுன்ம் அத்தியாவசியமான போக்குவரத்திற்கு மட்டும் சாலைகள் திறக்கப்படும் என்றும் கனடா அறிவித்துள்ளது. இதனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது

Leave a Reply