கண்ணீர் விட்ட கால்டாக்சி டிரைவர்

சென்னை விமான நிலையத்தில் கால்டாக்சி ஓட்டிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் தற்போது இளநீர் வியாபாரி ஆக மாறிவிட்டார். ஊரடங்கு இவரது வாழ்க்கையையே மாற்றிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் இளநீர் வியாபாரம் செய்து கொண்டிருந்த ஒருவர், இளநீர் வியாபாரம் பிடிக்காமல் ஸ்டைலாக இருக்க வேண்டும் என்பதற்காக கால் டாக்சி டிரைவராக மாறினார். இந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து சென்னை விமான நிலையம் மூடப்பட்டது

இதனால் அவர் வருமானம் இன்றி தவித்தார். அவருடைய மூன்று குழந்தைகளும் பசியால் தவித்தனர். இந்த நிலையில் தனது பழைய தொழிலான இளநீர் விற்பனை செய்யும் தொழிலை மீண்டும் தொடங்க அவர் முடிவு செய்தார்

தற்போது அவர் மதியம் ஒரு மணிவரை இளநீர் விற்பனை செய்து வருவதாகவும் அதில் கிடைக்கும் பணத்தில் தன்னுடைய மூன்று குழந்தைகளுக்கும் வயிறார சாப்பிடுவதாகவும் தெரிவித்துள்ளார் இந்த தொழில் தான் நிரந்தரம் என்பதை தற்போது புரிந்து கொண்டேன் கடவுள் எனக்கு கொடுத்த பரிசுதான் இனிமேல் கால் டாக்ஸி ஓட்ட மாட்டேன். இளநீர் விற்கும் தொழிலை தொடர்ந்து செய்வேன் என்று அவர் கண்ணீருடன் கூறியது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது

Leave a Reply