Chennai Today News

மாயவன்’ படத்தை அடுத்து ‘டைட்டானிக்’ படம் தயாரிக்கும் சி.வி.குமார்

மாயவன்’ படத்தை அடுத்து ‘டைட்டானிக்’ படம் தயாரிக்கும் சி.வி.குமார்

சி.வி.குமார் இயக்கிய வித்தியாசமான திரைப்படமான ‘மாயவன்’ படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்த நிலையில் தற்போது அவர் அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார்.

காதலும் கவுந்து போகும் என்ற வரிகளுடன் ‘டைட்டானிக்’ என்ற டைட்டில் கொண்ட படத்தை சி.வி.குமார் தயாரிக்கவுள்ளார். இந்த படத்தில் கலையரசன் நாயகனாவும் அவருக்கு ஜோடியாக ஆனந்தி, ஆஷ்னா ஜாவேரி ஆகிய இரண்டு நாயகிகளும் நடிக்கவுள்ளனர்

எம்.ஜானகிராமன் என்ற புதுமுக இயக்குனர் இயக்கவுள்ள இந்த படத்திற்கு நிவாஸ் பிரசன்னா இசையமைக்கவுள்ளார். இவர் ‘தெகிடி, ‘சேதுபதி’, ஜீரோ மற்றும் கூட்டத்தில் ஒருவன் ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!