பிப்ரவரி 13ஆம் தேதி 8 மாநிலங்களில் இடைத்தேர்தல்

election-commission-indiaஉத்தரப்பிரதேசம், பஞ்சாப் உட்பட 8 மாநிலங்களில் காலியாக உள்ள 12 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் பிப்ரவரி 13ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில், முஸாபர்நகர், தியோபந்த், பிகாபுர் தொகுதிகளுக்கும், கர்நாடகத்தில் தேவதுர்கா, பிரட், ஹெப்பால் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

பஞ்சாப், மகாராஷ்டிரா, பிஹார், திரிபுரா, தெலங்கானா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங் களில் தலா ஒரு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இதுதொடர்பான முறையான அறிவிப்பு வரும் 20-ம் தேதி வெளியிடப்படும். வரும் 27-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய இறுதிநாள். மேலும் தமிழக சட்டமன்ற தேர்தல் நாள் குறித்த அறிவிப்பு வெளியிடுவது குறித்தும் விரைவில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என்று தேர்தல் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Chennai Today News: Bypolls in 12 Assembly seats of 8 states on February 13

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *