shadow

அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகிய முன்னாள் அதிபர் புஷ் சகோதரர்.

bushதற்போது அமெரிக்க அதிபராக இருந்து வரும் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் முடிவடையவுள்ளதை அடுத்து வரும் நவம்பரில் அங்கு அதிபர் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் ஹிலாரி கிளிண்டன் போட்டியிடவுள்ளதாகவும் அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் மகனும் முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபள்யூ புஷ்ஷின் இளைய சகோதரருமான ஜெப் புஷ் போட்டியிடவுள்ளதாக செய்திகள் வெளிவந்தது.

ஆனால் குடியரசு கட்சியில் ஜெப் புஷ்ஷை விட டொனால்ட் டிரம்ப்புக்கு கட்சியில் அதிக ஆதரவு குவிந்து வருவதால் தேர்தல் போட்டியில் இருந்து விலக ஜெப் புஷ் முடிவு செய்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் டொனால்ட் டிரம்புக்கு ஜெப் புஷ் வாழ்த்து தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply