செல்போன் பேசிய பேருந்து ஓட்டியதால் திருப்பதி மலைப்பாதையில் சென்ற பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் 5 பக்தர்கள் படுகாயம் அடைந்தனர்.

திருப்பதியில் இருந்து திருமலைக்கு நேற்று காலை பேருந்து ஒன்று 46 பக்தர்களுடன் சென்று கொண்டிருந்தது. பேருந்து ஓட்டுனர் வளைவுப்பாதைகளில் சென்று கொண்டிருந்தபோது செல்போன் அழைப்பு வந்ததால் செல்போனில் பேசியபடியே பேருந்தை ஓட்டியிருக்கிறார். அப்போது எதிர்பாராத நிலையில் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து 13வது வளைவில் இருந்த தடுப்பு சுவரில் மோதி தலைகிழாக கவிழ்ந்தது. பேருந்தில் இருந்த பயணிகள் அலறியதால் அந்த இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னால் வந்த பேருந்தில் இருந்தவர்கள் உடனடியாக இறங்கி, விபத்துக்குள்ளான பேருந்தில் சிக்கியவர்களை மீட்க உதவி செய்தார்கள். இந்த விபத்தில் 5 பக்தர்களுக்கு படுகாயம் ஏற்பட்டது. அவர்கள் திருப்பதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பேருந்து ஓட்டுனர்கள் செல்போன் பேசியபடி பேருந்து ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆந்திர மாநில போக்குவரத்து துறை அதிகாரி கூறியுள்ளார். விபத்துக்குள்ளான பேருந்து ஓட்டுனரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Leave a Reply