shadow

மலேசிய விமானம் MH370-க்கு என்ன ஆனது? அமெரிக்க ஆய்வாளர் புதிய தகவல்

3கடந்த 2014ஆம் ஆண்டு மலேசியா தலைநகரம் கோலாலம்பூரில் இருந்து சீனாவுக்கு சென்ற MH370 விமானம் திடீரென மாயமாகி அதில் பயணம் செய்த 5 இந்தியர்கள் உள்பட 239 பேர் கதி என்னவென்று கடைசி வரை தெரியாமல் மர்மமாகவே போனது. அந்த விமானத்தை கண்டுபிடிக்க உலகின் பல நாடுகளின் விஞ்ஞானிகள் செய்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

ஆனாலும் இந்த விமானத்தின் பாகங்கள் இந்திய பெருங்கடல் பகுதியில் அவ்வப்போது கிடைத்து வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அமெரிக்காவை சேர்ந்த ஆய்வாளர் பிளைன் ஜிப்சன் என்பவர் விமானத்தின் 5 பாகங்களை கண்டுபிடித்து அவற்றை ஆஸ்திரேலியாவில் உள்ள போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பிடம் வழங்கி உள்ளார்.

இந்நிலையில் இதுவரை கிடைத்த விமானங்களின் பாகங்களை ஆய்வு செய்த ஜிப்சன் அந்த விமானம் தீப்பிடித்து எரிந்து விழுந்திருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறியுள்ளார். தனக்கு கிடைத்த பாகங்களில் தீப்பிடித்ததற்கான அடையாளங்கள் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆயினும் விமானம் தானாக தீப்பிடித்ததா? அல்லது குண்டு வெடிப்பு சதி வேலை காரணமாக தீப்பிடித்ததா? என்பது குறித்து தெரியவில்லை என்றூம் அதுகுறித்து மலேசிய அரசுதான் விசாரணை செய்ய வேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Leave a Reply