பிசியான தெருவில் திடீரென பொழிந்த பணமழை: கோடிக்கணக்கில் கொட்டியதால் பரபரப்பு

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஒரு பிஸியான தெருவில் திடீரென கோடிக்கணக்கில் பணம் மேலே இருந்து கொட்டியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது

மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் உள்ள பெனடிக்ட் என்ற தெருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் திடீர் என வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். ஐந்தாவது மாடியில் இந்த நிறுவனத்தின் அலுவலகம் இயங்கி வந்த நிலையில் வருமான வரித்துறையினர் சோதனைக்கு வந்துள்ளதை அறிந்ததும் இந்த நிறுவனத்தில் உள்ளவர்கள் பதுக்கி வைத்திருந்த பணத்தை ஜன்னல் வழியாக வீசியதாக தெரிகிறது

ஒரே நேரத்தில் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் பணம் திடீரென தெருவின் நடுவில் விழுந்ததைப் பார்த்ததும் தெருவில் சென்று கொண்டிருந்த மக்கள் இன்ப அதிர்ச்சியாகி முந்திக்கொண்டு பணத்தை எடுத்துச் சென்றனர். இதுகுறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் மிக வேகமாக பரவி வருகிறது

இந்த நிலையில் பணத்தை வீசி எறிந்த தனியார் நிறுவன ஊழியர்களிடம் வருமான வரித் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். ஜன்னல் வழியாக வீசி எறியப்பட்ட பணத்தின் மதிப்பு எவ்வளவு என்று தெரியவில்லை. ஒரு ஒரு நோட்டை கூட விடாமல் பொதுமக்கள் அள்ளிச் சென்று விட்டதால் சோதனைக்கு வந்த வருமானவரித்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply