shadow

தொடர் போராட்டம் எதிரொலி: புல்லட் ரயில் திட்டத்தை நிறுத்தியதா ஜப்பான்?

இந்தியாவின் முதல் புல்லட் ரெயில் மும்பையில் இருந்து அகமதாபாத் நகருக்கு செல்லும் திட்டம் கடந்த சில வாரங்களுக்கு முன் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த திட்டத்தின் தொடக்க விழாவில் ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே இந்தியா வந்து கலந்து கொண்டார்.

இந்த புல்லட் ரயில் திட்டம் நிறைவேற்றப்பட்டால் மும்பை-அகமதாபாத் பயண நேரம் தற்போது 10 மணி நேரமாக இருந்து வரும் நிலையில் 3 மணி நேரமாக குறையும் என்று கூறப்பட்டது.

ஆனால் அதே நேரத்தில் இந்த திட்டத்தால் விவசாயிகளின் பல ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும் என்பதால் எதிர்ப்புகள் அதிகம் கிளம்பின. குஜராத்தில் இந்த திட்டத்திற்கு எதிராக கடுமையான போராட்டம் நடந்தது. மக்களின் தொடர் போராட்டம் காரணமாக இந்த திட்டத்திற்கு ஜப்பான் வழங்கி வரும் நிதி நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

Leave a Reply