shadow

கல்விக்கடனை வசூல் செய்ய ரிலையன்ஸ், ரிலையன்ஸ் கடனை யார் அடைப்பது? கம்யூனிஸ்ட் கேள்வி

education-loan_thumbகல்விக்கடனை வசூல் செய்யும் பொறுப்பை சமீபத்தில் வங்கிகள், ரிலையன்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. இதனால் அந்நிறுவனம் மாணவர்களை மிரட்டி வசூல் செய்யும் வேலையில் இறங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்நிலையில் மாணவர்கள் பெற்ற சில ஆயிரம் கடனை அடாவடியாக வசூல் செய்ய முயற்சிக்கும் ரிலையன்ஸ் நிறுவனம், கோடிக்கணக்கான பணத்தை வங்கிகளில் இருந்து கடனாக பெற்றுள்ளதே, அந்த கடனை யார் அடைப்பார்கள்? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

‘கடந்த மார்ச் மாத இறுதி நிலவரத்தின்படி, அதானி குழுமம் ரூ. 96,031 கோடி, எஸ்ஸார் குழுமம் 1.01 ட்ரில்லியன் ரூபாய், ஜி.எம்.ஆர் குழுமம் ரூ.47,976 கோடி, ஜி.வி.கே. குழுமம் 33,933 கோடி, ஜே.பி குழுமம் ரூ.75,163 கோடி, ஜே.எஸ்.டபிள்யூ ரூ. 58,171 கோடி, லான்கோ குழுமம் ரூ.47,102 கோடி, ரிலையன்ஸ் 1.25 ட்ரில்லியன் ரூபாய், வேதாந்தா குழுமம் 1.03 ட்ரில்லியன் ரூபாய், வீடியோகான் குழுமம் 45,405 கோடி ரூபாய் என மொத்தம் ரூ.7 லட்சம் கோடிகளைக் கடனாகப் பெற்றுள்ளன. ஆனால் இந்த தொகையில் சுமார் 5.60 லட்சம் கோடி ரூபாய் பணம் வாராக்கடன் என்று பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.’

இந்த கடன்களை வசூல் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்காத மத்திய அரசும், வங்கி நிர்வாகங்களும் மாணவர்கள் பெற்ற கடன்களுக்கு கெடுபிடி காட்டுவது எந்த விதத்தில் நியாயம் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இதுகுறித்து வரும் 18ஆம் தேதி கூடும் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

Budget session opposition all set to nail Government

Leave a Reply