shadow

3வது அணியின் பிரதமர் வேட்பாளர் மாயாவதியா?

இந்திய பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் இந்த தேர்தலை சந்திக்க இப்போதே தயாராகி வருகின்றன. காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளுக்கு மாற்றாக தேசிய அளவில் மூன்றாவது அணி அமைக்க ஒருசில தலைவர்கள் முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் சமீபத்தில் கர்நாடகாவில் குமாரசாமி பதவியேற்பு விழாவில் ஆலோசனை செய்த பல தலைவர்கள் காங்கிரஸ் அல்லாத கூட்டணி, மீண்டும் பாஜக வெற்றி பெற சாதகமாகிவிடும் என்று கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் [அகுஜன் சமாஜ் கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வருகிற நாடாளுமன்ற தோ்தலில் மாயாவதியை பிரதமா் வேட்பாளராக முன்னிருத்துவது தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது.

ஆனால் 3வது அணியில் இணையும் தலைவர்கள் பலர் மம்தா பானர்ஜியே பிரதமர் வேட்பாளர் என்று கூறி வருகின்றனர். 3வது அணி ஆரம்பிக்கும் முன்னரே பிரதமர் வேட்பாளர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வெளியாகி வருவதால் 3வது அணி வெற்றிகரமான அணியாக இருக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Leave a Reply