shadow

நிதியுதவிக்கு பதிலாக தொழில்நுட்பம். பிரிட்டன் முடிவால் இந்தியாவுக்கு இல்லை. சுஷ்மா ஸ்வராஜ்

sushmaகடந்த 2012ஆம் ஆண்டு முதல் இந்தியாவுக்கு நிதியுதவி செய்து வரும் பிரிட்டன் அப்போது போட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் 2016ஆம் ஆண்டு முதல் இந்த நிதியுதவியை நிறுத்த உள்ளதாகவும், நிதியுதவிக்கு பதிலாக இந்தியாவுக்கு தொழில்நுட்ப ஆலோசனை வழங்கவுள்ளதாகவும் பிரிட்டன் அறிவித்துள்ளது. பிரிட்டன் நிதியுதவியை நிறுத்துவதால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்பது குறித்து ஆலோசனை செய்யப்படும் என இந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் அரசு பல்வேறு நாடுகளுக்கு அளிக்கும் நிதி உதவிகளை படிப்படியாக குறைக்கும் நடவடிக்கைகளில் கடந்த சில மாதங்களாக ஈடுபட்டு வருகிறது. இதனை அடுத்து இந்த நிதியின் பெரும் தொகையை பருவ நிலை மாற்றத்தை கட்டுப்படுத்த பயன்படுத்த உள்ளதாக அந்நாடு அறிவித்துள்ளது.

இந்திய அரசுக்கு 2013 முதல் வளர்ச்சி திட்டங்களுக்காக முதல் ஆண்டில் ரூ.855 கோடியும் அடுத்த ஆண்டில் சுமார் ரூ. 600 கோடியும் 2014ஆம் ஆண்டில் 190.06 கோடியையும் நிதி உதவியாக பிரிட்டன் அளித்தது.

பிரிட்டனின் நிதி நிறுத்தும் திட்டம் குறித்து சில தினங்களுக்கு முன்னர் கருத்து கூறிய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பிரிட்டனின் நிதி நிறுத்தபடுவதால் இந்தியாவுக்கு பாதிப்பு இருக்காது என்று கூறியிருந்தார்.

2012-ல் பிரிட்டன் அரசு இந்த முடிவை எடுத்தபோது நிதி அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி, “வளர்ச்சி திட்டங்களுக்காக இந்தியா செலவிடும் நிதியில் பிரிட்டன் அளிக்கும் பங்கு சிறிய அளவிலானது தான். அந்த தொகை இல்லாமலே இந்தியாவின் திட்டங்கள் இயங்கும்” என்றார்

Leave a Reply